ADDED : ஜூலை 09, 2026 08:21 PM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து தொழுநோய் பாதிப்பு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மதுரை மாவட்ட (தொழுநோய்)இணை இயக்குனர் விஜயன் தலைமை வகித்தார். பயனாளிகளுக்கு சேலை, கைலி, துண்டு , உணவு போன்றவை வழங்கப்பட்டன.. தலைமை மருத்துவ அலுவலர் தனசேகரன், வட்டார மருத்துவ அலுவலர் அஸ்வினி முன்னிலை வகித்தனர். மேற்பார்வையாளர்கள் ராஜரத்தினம், சந்திரசேகரன், உடற்கூறு நல கல்வியாளர் முருகேஷ், முத்தையா, சிவனேசன், சீதாராமன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், தன்னார்வலர்கள் குமார், சிவக்குமார், மோகன் பங்கேற்றனர். சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
