/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழக மக்களுக்கு ஸ்டாலின் என்ன செய்தார்: அ.தி.மு.க.,
/
தமிழக மக்களுக்கு ஸ்டாலின் என்ன செய்தார்: அ.தி.மு.க.,
தமிழக மக்களுக்கு ஸ்டாலின் என்ன செய்தார்: அ.தி.மு.க.,
தமிழக மக்களுக்கு ஸ்டாலின் என்ன செய்தார்: அ.தி.மு.க.,
ADDED : பிப் 22, 2025 05:41 AM
மதுரை: ''தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மகனை முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வராக்கி உள்ளார். இதன் மூலம் அவரது குடும்பத்துக்கு மட்டும்தான் அப்பாவாக செய்துள்ளார். தமிழக மக்களுக்கு என்ன செய்தார்'' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் கேள்வி எழுப்பினார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
இன்றைக்கு இளைய தலைமுறைக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த தேர்தல்வாக்குறுதியை எதை நிறைவேற்றி உள்ளார். ஒரே ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்றார். இதுவரை 40 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி உள்ளாரா. 'நீட்' தேர்வை ரத்து செய்வோம் என்றார். அதை நிறைவேற்றினாரா.
மாணவர் கல்விக்கடனை ரத்து செய்தாரா. எதையும் செய்யாமல் மகன் உதயநிதியை துணை முதல்வராக்கி உள்ளார். இதன் மூலம் அவரது குடும்பத்துக்கு மட்டும்தான் அப்பாவாக செய்துள்ளார். தமிழக மக்களுக்கு என்ன செய்தார்.
அ.தி.மு.க., ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்த மடிக்கணினி திட்டம், தாலிக்கு தங்கம் திட்டத்தை தி.மு.க., அரசு நிறுத்திவிட்டது. இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் மனம் சோர்வடைந்து போதை கலாசாரத்திற்கு ஆளாகின்றனர்.
கேள்வியும் நானே, விடையும் நானே என தயாரித்து, தான் செய்யும் மக்கள் விரோத செயல்களை திசை திருப்பும் வகையில் முதல்வர் பேசி வருகிறார்.
'இளைய தலைமுறை என்னை அப்பா என்று அழைப்பதை கேட்கும்போது ஆனந்தமாக இருக்கிறது. பொறுப்புகள்மாறலாம். ஆனால் இந்த அப்பா என்ற உறவு மாறாது. அந்த சொல் என் பொறுப்புகளை இன்னும் கூட்டியிருக்கிறது' என்று வாய்க்கூசாமல் பேசியுள்ளார். இன்றைக்கு ஸ்டாலின் இளைய தலைமுறைக்கு அப்பாவாக தெரியவில்லை. ஹிட்லராக தான் தெரிகிறார்.
இவ்வாறு கூறினார்.

