/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்லி பரப்பியாச்சு தார் ரோடு என்னாச்சு
/
ஜல்லி பரப்பியாச்சு தார் ரோடு என்னாச்சு
ADDED : ஏப் 28, 2024 04:00 AM

மேலுார் :  முக்கம்பட்டியில் ஜல்லி பரப்பி மூன்று மாதமாகியும் தார் ரோடு அமைக்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது.
ஆமூர் ஊராட்சி முக்கம்பட்டியில் திருவாதவூர், மதுரை செல்ல ஒரு ரோடு தான் உள்ளது. 15 ஆண்டுகளாக ரோடு அமைக்கவில்லை.
மக்கள் தொடர்ந்து மனு கொடுத்ததை தொடர்ந்து 3 மாதங்களுக்கு முன் ஜல்லி கற்கள் பரப்பினர். இதுவரை ரோடு அமைக்கவில்லை.
மக்கள் கூறியதாவது: ஜல்லிகற்கள் மீது நடப்பதால் காலில் காயம் ஏற்படுகிறது. டூவீலரில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர். கற்கள் குத்தி டயர் பஞ்சராக வாய்ப்புள்ளதால் பல கி.மீ., துாரம் வயல் வெளியில் சுற்றிச் செல்கிறோம். ஆம்புலன்ஸ், ஆட்டோ ஊருக்குள் வர மறுக்கின்றன என்றனர்
ஊராட்சி தலைவி பாண்டீஸ்வரி கூறுகையில்,ஓரிரு நாளில் ரோடு அமைக்கும் பணி துவங்கப்படும் என்றார்.

