/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆண்கள் என்ன பாவமா: சிகிச்சைக்கு நீண்ட வரிசையில் காத்திருப்பு: அரசு மருத்துவமனை இயற்கை நல்வாழ்வு பிரிவில்

ADDED : மே 04, 2024 05:38 AM

இந்த பிரிவுக்கு டாக்டர் அறை, சிகிச்சை அறை என இரண்டே அறைகள் தான் உள்ளன. கை, கால், முதுகுவலி, உடற்பருமன் சிகிச்சைக்கு களிமண் தெரபி, தண்ணீர்
சிகிச்சை, வாழையிலை, நீராவி குளியல், வலி நீக்கும் மெழுகு சிகிச்சை, அகச்சிவப்பு ஒளி சிகிச்சை, அக்குபிரஷர், அக்குபஞ்சர், நவீன சைக்கிளிங், மசாஜ் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
டாக்டர் சொல்லும் சிகிச்சை முறையை செய்வதற்கு ஆண், பெண்களுக்கு தனியாக தெரபிஸ்டுகள் உள்ளனர். ஆனால் ஒரே ஒரு அறை இருப்பதுதான் பிரச்னை. பெண்கள் பெரும்பாலும் காலை 8:00 மணிக்கே வந்து விடுகின்றனர். டாக்டரை சில நிமிடங்களில் பார்க்க முடிந்தாலும் ஒவ்வொருவருக்கும் சிகிச்சையைப் பொறுத்து அரைமணி நேரம் முதல் ஒருமணி நேரமாகும். வரிசையில் 5 பெண்கள் காத்திருந்தால் 6 வதாக வரும் ஆண் நோயாளி கிட்டத்தட்ட 2 மணி நேரம் காத்திருக்கின்றனர்.
வார்டின் முன்பக்கம் நோயாளிகள் காத்திருக்கும் அறையின் மேற்பகுதி ஆஸ்பெஸ்டாஸ் கூரையால் வேயப்பட்டுள்ளது. டாக்டர், சிகிச்சை அறைகள் மட்டும் கான்கிரீட்டால் கட்டப்பட்டுள்ளது. கடும் வெயிலில் நோயாளிகள் மட்டுமின்றி தெரபிஸ்ட்களும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இடுப்பு பிரச்னை உள்ளவர்களுக்காக புதிதாக 'ஹிப் பாத்' எனப்படும் இடுப்பு குளியல் தொட்டிகள் நான்கு வரவழைக்கப்பட்டுள்ளது. அதில் தண்ணீரை நிரப்புவதற்கு மின்இணைப்பும், குழாய் இணைப்பும் வழங்காததால் காட்சிப்பொருளாக உள்ளது. முன்பகுதி மற்றும் மாடிப்பகுதியை முழுமையாக யோகா மற்றும் இயற்கை நல்வாழ்வு பிரிவுக்கு வழங்கினால் நோயாளிகள் காத்திருக்காமல் சிகிச்சை பெறமுடியும்.