ADDED : ஆக 01, 2026 06:54 PM

அ நிறம் | அளவு
மதுரை: ஆவின் சார்பில் விநியோகிக்கப்படும் ‘டிலைட்’ பால் பாக்கெட்டில் துர்நாற்றம் வீசிய புகாரில், பால் அடைக்கப்படும் பாலித்தீன் பிலிமில் இருந்து துர்நாற்றம் ஏற்பட்டதாக ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
கடந்த ஜூலை 27ல் மதுரையில் விநியோகிக்கப்பட்ட டிலைட் 500 மில்லி பால் பாக்கெட்டுகளில் துர்நாற்றம் வீசியதாக புகார் வந்தது. இதையடுத்து ஆவின் நிர்வாகம் ஆய்வு செய்து கூறியதாவது: துர்நாற்றம் பாலில் இல்லை. பால் பாக்கெட்டுகளை அடைக்க பயன்படுத்தப்பட்ட பாலி பிலிம் பொருளின் முறையற்ற ‘கியூரிங்’ செயல்முறையால் ஏற்பட்டது.
இதையடுத்து பால் நிரப்பும் உற்பத்தி வரிசையிலிருந்து அவை அகற்றப்பட்டன. சம்பந்தப்பட்ட பாலித்தீன் பிலிம் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதுடன், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.
