/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இலவச காய்கறி விதைகள் நாற்றுகளை அரசு வழங்குமா; விவசாயிகள் எதிர்பார்ப்பு

ADDED : ஜூலை 03, 2024 05:45 AM
திருப்பரங்குன்றம், : ''இரண்டு ஆண்டுகளாக முடக்கப்பட்ட இலவச காய்கறி விதைகள், நாற்றுகள் வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டாவது அரசு வழங்க வேண்டும்'' என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
விவசாயிகள் சிவராமன், பாண்டியன் கூறியதாவது: திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள மானாவாரி பகுதிகளில் ஆடி, ஆவணி, புரட்டாசியில் ஏராளமான விவசாயிகள் காய்கறிகள் பயிரிடுவர். ஆடி மாதம் காய்கறி விதைகளும், ஆவணி, புரட்டாசி மாதம் கத்தரி, மிளகாய், தக்காளி நாற்றுகளும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நாற்றுகளும், விதைகளும் வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் காய்கறிகள் பயிரிடுவதில் ஆர்வம் காட்டவில்லை. நாற்றுக்களை விலைக்கு வாங்க தேனி, ஒட்டன்சத்திரம் செல்ல வேண்டும். ஏக்கருக்கு ரூ. பத்தாயிரம் முதல் செலவாகும். போக்குவரத்து செலவு ரூ. 2,000 ஆகும். இதனால் பெரும்பாலான விவசாயிகள் காய்கறி பயிரிடவில்லை. இந்த ஆண்டாவது அரசு காய்கறி விதைகள், நாற்றுக்களை வழங்க வேண்டும் என்றனர்.