ADDED : ஜூன் 26, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை செல்லுார் - குலமங்கலம் மெயின் ரோட்டில் மீனாம்பாள்புரம் ஆலமரம் அருகே தெருவிளக்கு பழுதாகி பல வாரமாக எரியாமல் உள்ளது.
இப்பகுதி வளைவுப்பாதையாக உள்ளதால் இவ்வழியாக இரவில் ஆலங்குளம், குலமங்கலம் பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் வெளிச்சமின்றி தடுமாறி விழும் நிலை உள்ளது. உயிர்ச்சேதம் ஏற்படும் முன் இவ்விடத்தில் ஹைமாஸ் விளக்கு அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் அபுபக்கர் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.