/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காவு வாங்க காத்திருக்குது மேல்நிலை குடிநீர் தொட்டி கண்டுகொள்ளுமா ஊராட்சி
/
காவு வாங்க காத்திருக்குது மேல்நிலை குடிநீர் தொட்டி கண்டுகொள்ளுமா ஊராட்சி
காவு வாங்க காத்திருக்குது மேல்நிலை குடிநீர் தொட்டி கண்டுகொள்ளுமா ஊராட்சி
காவு வாங்க காத்திருக்குது மேல்நிலை குடிநீர் தொட்டி கண்டுகொள்ளுமா ஊராட்சி
ADDED : ஆக 26, 2024 07:00 AM

மேலுார்: சிதிலமடைந்துள்ளதால் எந்நேரமும் ஆபத்தான நிலையை எதிர்நோக்கியுள்ள எட்டிமங்கலம் மேல்நிலை குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக்கிராமத்தின் நடுவில் குடியிருப்பு மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே இருபது ஆண்டுகளுக்கு முன் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
செவக்களத்தில் போர்வெல் அமைத்து இந்த மேல்நிலை தொட்டி மூலம் குடியிருப்புகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்தத் தொட்டி தற்போது முற்றிலும் சிதிலமடைந்துள்ளது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: துாண்கள் முழுவதும் வெடிப்பு ஏற்பட்டு சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதால், கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரிகின்றன.
தொட்டியின் அருகிலேயே துவக்கப்பள்ளி செயல்படுவதால் மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.
தொட்டியின் மேல் பகுதியில் மரங்கள் முளைத்துள்ளதே வெடிப்புக்கு காரணம். தொட்டி அருகே உள்ள மரங்களின் கிளைகள் உடைந்து தொட்டியினுள் விழுவதால் சுகாதாரமற்ற தண்ணீர் சப்ளையாகிறது.
குழாய்கள் பாசி படர்ந்தும், தண்ணீர் தேங்கியும் கிடப்பதால் கொசு அதிகளவில் உற்பத்தியாகிறது. ஊராட்சி நிர்வாகம் இத்தொட்டியைஉடனே மராமத்து செய்ய வேண்டும்.
மரங்களின் கிளைகளை அகற்றி தொட்டியை சுத்தப்படுத்தி, சுகாதாரமான தண்ணீர் வழங்க வேண்டும் என்றனர்.
ஊராட்சி செயலர் பிரபு கூறுகையில், மேல்நிலை தொட்டி உடனே மராமத்து பார்க்கப்படும் என்றார்.

