/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கஸ்பா பட்டாணிக்கு இறக்குமதி தமிழக அரசு ஒப்புதல் தருமா; வியாபாரிகள் எதிர்பார்ப்பு

ADDED : மே 10, 2024 05:07 AM
மதுரை: மத்திய அரசு இறக்குமதி அனுமதி தர தயாராக உள்ள நிலையில் கஸ்பா பட்டாணிக்கு தமிழக அரசு ஒப்புதல் தர வேண்டும் என தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஐந்தாண்டுகளுக்கு முன் வரை ஆஸ்திரேலியாவில் இருந்து கஸ்பா ரக பட்டாணி இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகம், கேரளாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டது.
இந்த பட்டாணி பருப்பை அரைத்து வடை தயாரிக்கும் போது பல மணி நேரத்திற்கு அதன் மொறுமொறு தன்மை அப்படியே இருக்கும். சுவையும் நன்றாக இருக்கும். திடீரென பட்டியலில் இருந்து விடுபட்டதால் காரணமே இல்லாமல் இந்த பட்டாணி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
தற்போது ஆஸ்திரேலியாவில் இருந்து 'டன் பீஸ்' எனப்படும் பொரிகடலை தயாரிக்க பயன்படும் பட்டாணி இறக்குமதிக்கு மத்திய அரசு அடுத்தாண்டு மார்ச் 31 வரை அனுமதி வழங்கியுள்ளது. கஸ்பா பட்டாணி நுகர்வோருக்கு செல்லும் போது கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை குறைந்த விலையில் கிடைக்கும். கடலை பருப்புடன் ஒப்பிடும் போது விலையில் பாதி இருப்பதால் நுகர்வுத்தன்மை அதிகரிக்கும். கஸ்பா ரகம், பச்சை பட்டாணிக்கு மத்திய அரசு இறக்குமதி அனுமதி வழங்க தயாராக உள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு லட்சம் டன் வரை ஏற்றுமதி செய்ய தயாராக உள்ளதால் தமிழக அரசு இதற்கான அனுமதி வழங்க வேண்டும் என்றார்.