நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்,: அலங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டில் ரூ.1.49 கோடி மதிப்பில் வணிக வளாக மற்றும் தரைத்தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதனால் சில மாதங்களாக கேட்டுக்கடை பகுதி சந்திப்பு பஸ்ஸ்டாண்டாக செயல்படுகிறது. பல கிராமங்களுக்கு செல்ல காத்திருக்கும் பயணிகள் கழிப்பறை வசதியின்றி குறிப்பாக பெண்கள், மாணவிகள் சிரமப்படுகின்றனர். சிலர் அப்பகுதி ஓடைப்பகுதியை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. இதை தவிர்க்க தற்காலிக கழிப்பறைகளை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.