/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
/
மதுரையில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
ADDED : மார் 09, 2025 03:54 AM
மதுரை : மதுரையில் பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு அலுவலகங்களில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
யாதவா கல்லுாரியில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன் வசந்த், எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேசன், பூமிநாதன் கலந்து கொண்டனர். மதுரை அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர்கள் சார்பில் நடந்த விழாவிற்கு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்ட தலைவர் செல்வி தலைமை வகித்தார். டீன் அருள் சுந்தரேஷ்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல், ஆர்.எம்.ஓ.,க்கள் சரவணன், முரளிதரன், டாக்டர் செல்வராணி உட்பட பலர் பங்கேற்றனர்.
தானம் அறக்கட்டளை விழாவில் நிர்வாகி மோகன் வரவேற்றார். மாநகராட்சி கமிஷனர் சித்ரா தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் வாசிமலை, கனரா வங்கி துணைப் பொது மேலாளர் பாக்கியரேகா, திட்டத்தலைவர் அகிலாதேவி, களஞ்சிய இயக்கத் தலைவிகள் சின்னப்பிள்ளை, நாகஜோதி பேசினர். திட்ட தலைவர்கள் ராஜலட்சுமி, ஆபிரகாம் ஸ்டான்லி கலந்து கொண்டனர். வேளாண்மை அறிவியல் நிலைய விழாவில் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சமுதாய அறிவியல் கல்லுாரி மாணவர்கள் உணவு, ஊட்டச்சத்து திட்டம் பற்றி விளக்கினர். பேராசிரியர்கள் நிர்மலா, ஜோதிலட்சுமி கலந்து கொண்டனர்.
பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் கல்விக் குழுமம் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரவீந்திரன் வரவேற்றார். தலைவர் சரஸ்வதி, நிர்வாக இயக்குனர் வரதராஜன் பல்வேறு துறை சார்ந்த பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கினர். மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. சிவில் துறைத் தலைவர் மீனாட்சி சுடர்விழி நன்றி கூறினார்.
சேது பொறியியல் கல்லுாரியில் தலைவர் முகமது ஜலீல் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., மானிஷா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் சிவசங்கரி சமூக சேவையாளர்களுக்கு விருது வழங்கினர். மகளிர் மேம்பாட்டு துறை ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியை ஜெயசாந்தி, பாண்டிமாதேவி ஏற்பாடுகளை செய்தனர். நிர்வாக அதிகாரிகள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார் மரைக்காயர், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா பங்கேற்றனர்.
சேர்மத்தாய் வாசன் கல்லுாரியில் மகளிர் பயில்வுகள், இளைஞர் நலன் மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் கவிதா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக டிரஸ்டி முத்துலட்சுமி, நவிதா போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கினர். கலை நிகழ்ச்சி நடந்தது. துணை முதல்வர் மீனாலோசினி பேராசியர்கள் பங்கேற்றனர்.
புதுார் மேரி ஆன் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் ரெஜினா தலைமையில் கொண்டாடப்பட்டது. பட்டிமன்றம், பாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. வென்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.
பேரையூர்
கே.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில் சிறப்பு விருந்தினராக நடிகை பிரியதர்ஷினி பங்கேற்று கோலம், அலங்கார அணிவகுப்பு போட்டியில் வென்ற மாணவிகளுக்கும், சாதனையாளர்களுக்கும் விருது வழங்கினார்.
வாடிப்பட்டி
சமயநல்லுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ஜாக்குலின் தலைமை வகித்தார். டி.எஸ்.பி.,க்கள் ஆனந்தராஜ், ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சிறப்பாக பணியாற்றிய மகளிர் போலீசாருக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருமங்கலம்
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மேலக்கோட்டை விழாவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வி வரவேற்றார். மாவட்ட ஊராட்சி செயலாளர் விசாலாட்சி, உதவி செயற்பொறியாளர் விஜய்சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரகலா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் கலந்து கொண்டனர். துாய்மை காவலர்களுக்கு கையுறையை நிவேதன் தொண்டு நிறுவன நிறுவனர் நரேந்திரன் வழங்கினார்.