ADDED : செப் 05, 2026 11:41 PM
மதுரை: எஸ்.டி.பி.ஐ.,மாநில மகளிரணி பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்தது.
மாநில தலைவர் பாயாஜா ஷபீகா தலைமை வகித்தார். கட்சி மகளிரணி தேசிய துணை தலைவர் ரைஹானத் கூறியதாவது: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கூடுதல் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பெண் தொழில் முனைவோருக்கு பொருளாதார உதவிகளை விரிவுபடுத்த வேண்டும். அரசு நிறுவனங்கள், பொது இடங்களில் இலவச சானிட்டரி நாப்கின் மற்றும் அவற்றை பாதுகாப்பாக அழிக்கும் கருவிகளை நிறுவ வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும். தமிழக முதல்வர் விஜயால் கேரளாவில் ஒன்றும் செய்ய முடியாது. கேரள மக்களின் மனநிலை என்றும் இடதுசாரிகள் அல்லது வலதுசாரிகள்தான். அதைத் தாண்டி அங்கு யாருக்கும் வாய்ப்பு கிட்டாது. பிரதமர் வேட்பாளரtg ராகுல்தான் இருப்பார். விஜயால் இந்தியா முழுவதும் ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறு பேசினார்.
