ADDED : மார் 06, 2025 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கோவில்பாப்பாக்குடியில் 40 இடங்களில் ரூ.5 கோடி மதிப்பிலும், மேலுார் அரிட்டாபட்டியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் 17 அடிப்படை வசதிகளுக்கான பணிகளையும் அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.
கலெக்டர் சங்கீதா, கூடுதல் கலெக்டர் மோனிகாராணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அமைச்சர் பேசுகையில், ''கோவில்பாப்பாகுடி நகரின் அருகில் உள்ளதால் பத்தாண்டுகளில் அதிகளவு வளர்ந்துள்ளது.
இங்கு 40 சாலைகளை மேம்படுத்தும் பணி முடிவதற்குள், மீதியுள்ள 34 குறுக்குச் சாலைகள், ரூ.28 கோடிக்கு தார்சாலைகளை அமைக்க பணிகளை துவக்கி ஒருமாதத்திற்குள் முடிக்க உள்ளோம்'' என்றார்.