ADDED : செப் 08, 2024 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் மானாவாரி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் பெய்த மழை ஈரத்தை பயன்படுத்தி விதைப்பு பணிகளை முடித்தனர். அவ்வப்போது பெய்த லேசான மழையால் செடிகள் செழித்து வளர்ந்து வருகிறது. இத்தருணத்தில் களை எடுக்கும் வேலைகளை துவக்கியுள்ளனர்.
ஒரே நேரத்தில்இப்பணிகள் துவங்கியுள்ளதால் கூலியாட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வேலையில்லாமல் இருந்த விவசாய தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.