ADDED : மே 05, 2024 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு பெரிய கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை, 60, என்பவர் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று காலை கட்டுமான பணியின்போது, கட்டடத்திற்கு தண்ணீர் ஊற்ற மின் மோட்டாரை போட்டபோது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காவேரிப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.