ADDED : ஏப் 02, 2024 06:23 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி : பாலமேடை அடுத்த அரசம்பட்டி முத்துராஜா 35, தேங்காய் வெட்டும் தொழிலாளி.
இவர் மார்ச் 26 காலை 6:00 மணிக்கு பாலமேட்டில் இருந்து வாடிப்பட்டிக்கு டூவீலரில் சென்றார். எல்லையூர் அருகே மலைப்பகுதியில் இருந்து இறங்கிய காட்டு மாடு டூவீலரில் மோதியதில் கீழே விழுந்த முத்துராஜா பலத்த காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளன.
