/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை வேலம்மாள் கல்லுாரியில் பயிலரங்கம்
/
மதுரை வேலம்மாள் கல்லுாரியில் பயிலரங்கம்
ADDED : ஆக 04, 2024 04:39 AM
மதுரை: மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லுாரி தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் டி.ஆர்.டி.ஓ., (பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பு) ஆதரவுடன் துல்லிய விவசாயத்திற்கு உதவும் 'ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜ்' பயிலரங்கம் ஆக.1 முதல் 3 வரை நடந்தது.
முதல்வர் அல்லி தலைமை வகித்தார். தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியர் கவிதா வரவேற்றார். டி.என்.ஏ.யூ., கல்லுாரி பேராசிரியர் குருசாமி ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் படமெடுக்கும் முக்கியத்துவத்தை விவரித்தார். இணைப் பேராசிரியர் பிரபாகரன் விவசாயத்தில் புவியியல் தகவல் முறைமை பற்றி பேசினார். கே.எல்.என்.சி.இ., பேராசிரியர் கணேஷ்குமார் விவசாயத்தில் பாதுகாப்பு சவால்களை விளக்கினார்.
எலக்ட்ரோ டெக் இன்டர்நேஷனல் பொறியாளர் புருஷோத்தமன், மத்திய தமிழ்நாடு பல்கலை புவியியல் துறை உதவி பேராசிரியர் அருண் பரிசாத், 'ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் பெக்ட்ரோ ரேடியோ மீட்டரின் பயன்பாடு' குறித்து பேசினர். பார்மோனாட் நிறுவன தொழில்நுட்ப டெவலப்பர் விபுல் பலோடா 'வேளாண்மை பயன்பாடுகள்' குறித்து விளக்கினார். சத்யுக்ட் அனலிட்டிக்ஸ் நிறுவனர் சட் குமார் டோமர், கல்லுாரி கணினி அறிவியல் பொறியியல் துறைத் தலைவர் பெருமாள் ராஜா பங்கேற்றனர்.
பேராசிரியர் கமலேஷ் நன்றி கூறினார்.