ADDED : செப் 02, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் தாலுகாவில் சாகுபடி செய்துள்ள வெண்டைக்காய்க்கு நல்ல மகசூல் கிடைத்த போதிலும், போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: கிணற்றுப் பாசன நிலத்தில், நவீன ரக வெண்டையை சாகுபடி செய்கிறோம். 45வது நாளில் காய்க்க துவங்கும்.
தினமும் அதிகாலையில், ஆட்கள் மூலம் வெண்டைக் காயை பறிப்போம். வெண்டைச் செடியை பூச்சி தாக்காமல், மருந்து வைத்து நன்கு பராமரித்தால், தொடர்ந்து நான்கு மாதங்கள் காய்க்கும். 50 சென்ட் நிலத்தில் ஒரு நாளில் 40கிலோ வெண்டை மகசூல் கிடைக்கிறது.
ஆனால் நல்ல விலை கிடைப்பதில்லை. ஒரு கிலோ வெண்டைக் காய் ரூ.6 முதல் 8 ரூபாய் வரை விற்கிறது.
பறிப்பு கூலிக்குக் கூட விலையில்லை. இதனால் பலர் வெண்டையை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுவிட்டனர் என்றனர்.