நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: சமயநல்லுார் அருகே தோடனேரியில் செண்பகம் பிள்ளை, முத்துப்பிள்ளை வகையறா பங்காளிகளின் கட்டப்புள்ளி கருப்பண சுவாமி கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது.
சிறப்பு யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. சுவாமியின் சூலாயுதத்திற்கு அழகர்கோவில், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல புனித தலங்களின் நீர் தெளிக்கப்பட்டது.
அபிஷேகம், மகா தீபாராதனைகள் நடந்தன.அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டி தலைவர் முருகேசன், செயலாளர் கதிரேசன், பொருளாளர் விஜயகுமார் செய்திருந்தனர்.

