நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் மே 1 முதல் உடலை குளிர்விக்கும் சிறப்பு யோகா பயிற்சி வகுப்பு நடக்கிறது.
தெப்பக்குளம் கீதா நடனகோபால நாயகி மந்திரில் தினமும் காலை 6:15 மணி முதல் 7:00 மணி வரையிலும், குழந்தைகள், பெண்களுக்கு தெப்பக்குளம் டாக்டர் கோகுல்நாத் பாலாஜி நர்சிங் ேஹாமில் தினமும் காலை 10:00 முதல் 11:00 மணி வரையிலும் வகுப்பு நடக்கும். உடல் தளர்வு, பிராணாயாமம், ஓய்வு உத்திகள், ஆசனங்கள், தியானம் போன்றவை பயிற்றுவிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு இயக்குனர் கங்காதரனை 94875 37339ல் தொடர்பு கொள்ளலாம்.

