ADDED : ஜூன் 11, 2026 10:43 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் யோகா பயிற்சி முகாம் நடந்தது.
தலைமை ஆசிரியர் மதன் பிரபு வரவேற்றார். பிரம்மகுமாரிகள் அமைப்பின் யோகா பயிற்றுனர்கள் ஆசா, பாலமுருகன் ஆகியோர், யோகா செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள், நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர். எளிய யோகா பயிற்சிகளை பயிற்றுவித்தனர்.
