ADDED : ஜூன் 04, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் போக்குவரத்து விதி மீறி கார் ஓட்டியதாக கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்ட யுடியூபர் டி.டி.எப். வாசன், தினமும் அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வருகிறார்.
நேற்று அவரது அலைபேசி ஆவணங்களை ஒப்படைக்குமாறு போலீசார் சம்மன் வழங்கி இருந்தனர். நேற்று ஆஜரான வாசன் தனது அலைபேசி, ஆவணங்கள் சென்னையில் உள்ளதால் ஒப்படைக்க 2 நாள் அவகாசம் கேட்டார். புதன்கிழமை ஒப்படைக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.