ADDED : மார் 03, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வேளாண்மை விரிவாக்க மைய பகுதி விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ஜிங் சல்பேட் வழங்கப்பட்டு வருகிறது.
உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், ''அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ஜிங் சல்பேட், நெல் நுண்ணுரம் வழங்கப்படுகிறது. தேவைப்படுவோர் கணினி சிட்டா, ஆதார் நகலுடன் திருநகர் 2வது பஸ் ஸ்டாப் அருகே ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண்மை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.