/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அண்டாக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டிய 100 நாள் திட்ட பணியாளர்கள்
/
அண்டாக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டிய 100 நாள் திட்ட பணியாளர்கள்
அண்டாக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டிய 100 நாள் திட்ட பணியாளர்கள்
அண்டாக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டிய 100 நாள் திட்ட பணியாளர்கள்
ADDED : ஜன 30, 2026 06:35 AM
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கலைஞர் நுாற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் மேற்கு சட்டசபை தொகுதிக்கான ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது. இதில் வெற்றிபெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளை, வீரர்களுக்கு சைக்கிள், அண்டா பரிசுகள் வழங்கப்பட்டன.
பிரமாண்ட அரங்கத்தின் முதல் மாடியில் உள்ள அறையில் 200 சைக்கிள், 500க்கும் மேற்பட்ட அண்டாக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அண்டாவில் ' முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மூர்த்தி படங்கள் அடங்கிய தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்ட பெரிய இலந்தைகுளம் ஊராட்சி ஓடையில் வேலை பார்த்த 100 நாள் வேலை திட்ட வயதான பெண் பணியாளர்கள் 20 பேரை மினி லோடு வேனில் அழைத்து வந்தனர்.