ADDED : ஜூன் 17, 2026 02:05 AM
மதுரை: மதுரை போலீஸ் கமிஷனர் கபில்குமார் சரத்கர் உத்தரவுபடி, நேற்றுமுன்தினம் முதல் போலீசார் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் செலுத்தாதோருக்கு நகரின் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி வருகின்றனர். இரண்டு நாட்களில் 221 வாகன ஓட்டிகளுக்கு தகவல் தெரிவித்து உடனே அபராதம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
இதில் 107 பேர் ரூ.88,630 அபராதம் செலுத்தினர். மற்றவர்கள் இரு தினங்களுக்குள் அபராதம் செலுத்த வேண்டும்.
தவறும் பட்சத்தில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டது.
அதே சமயம் நம்பர் பிளேட் சரியான அளவீடுகளில் இல்லாமல், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வெவ்வேறு அளவுகளில் பொருத்தப்பட்டுள்ள 589 வாகனங்களை கண்டறியப்பட்டுள்ளன. இதில் 289 வாகன ஓட்டிகள் நம்பர் பிளேட்டுக்களை சரி செய்து காண்பித்தனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்தும், சிக்னல்களில் நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் வெள்ளைக்கோடு தாண்டி நிறுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. போலீசார் சார்பில், போக்குவரத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
