ADDED : செப் 13, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
திருநகர்: மதுரை திருநகர் பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று துவங்கியது.
மகா கணபதி ஹோமம், மூல மந்திரஹோமம், தீபாராதனை நடந்தது. பின்பு மூலவர்கள் சித்தி, புத்தி, கல்யாண விநாயகர், உற்ஸவர் விநாயகருக்கு 108 சங்காபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்னாள் அறங்காவலர் சண்முகசுந்தரம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
