/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அடகு நகையை தராமல் 109 சவரன் மோசடி
/
அடகு நகையை தராமல் 109 சவரன் மோசடி
ADDED : ஜன 21, 2026 08:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை, மேலக்கால் சாலை ஜெயபாரத் சிட்டியை சேர்ந்தவர் பிரேம்சந்தர், 58; மினரல் வாட்டர் தொழில் செய்கிறார்.
தொழில் வளர்ச்சிக்காக பணம் தேவைப்பட்டதால், புரோக்கர்கள் மூலம் பொன்னகரம் ராஜசேகர் என்பவரிடம், 109 சவரன் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றார்.
அவற்றை மீட்க சென்றபோது, 'நகைகளை உருக்கி விற்றுவிட்டேன். நீ கொடுத்த நகைகளுக்கு நான் கொடுத்த பணம் சரியா போச்சு. நகைகளை திருப்பித்தர முடியாது' எனக்கூறி, ராஜசேகர் கொலை மிரட்டல் விடுத்தார்.
புகாரில், எஸ்.எஸ்.காலனி போலீசார், ராஜசேகர், அவரது மனைவி, மருமகன், புரோக்கர் வெங்கடேஷ் உட்பட ஆறு பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

