ADDED : அக் 01, 2025 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலூர் : சென்னை அசோக் நகர் ரூபன் ராஜ் 28. இவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் 12 பேருடன் சென்னையிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலுக்கு சென்றார். பஸ்சை சென்னை பூந்தமல்லி கண்ணன் ஓட்டினார்.
நேற்று மாலை செட்டியார்பட்டி விலக்கருகே சென்றபோது பின்பக்க டயர் வெடித்து பஸ் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
பஸ்சில் பயணம் செய்த முத்துக்குமார் 33, நாகராஜ் 37, ராஜ்குமார் 58, உள்ளிட்ட 12 பேர் காயமுற்றனர். மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.