/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கூட்டத்தை சமாளிக்க 120 சிறப்பு பஸ்கள்
/
கூட்டத்தை சமாளிக்க 120 சிறப்பு பஸ்கள்
ADDED : ஆக 14, 2025 03:00 AM
மதுரை: சுதந்திர தினத்தையொட்டி 3 நாள் விடுமுறை கிடைப்பதால் கூட்டத்தை சமாளிக்க மதுரையில் இருந்து 120 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் முக்கிய பண்டிகைகளின் போது சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வரும் கூட்டத்தை சமாளிக்க சிறப்பு பஸ்கள் விடுவது வாடிக்கை. ஆக.15 சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை வருகிறது. இதையடுத்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் அதிக பயணிகள் சொந்த ஊர் செல்வர். இதை சமாளிக்க மதுரையில் இருந்து நேற்று முதல் 3 நாட்களுக்கு 120 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் இன்று (ஆக.14) சென்னையில் இருந்தும் மதுரைக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இப்பஸ்களுக்கு இணையத்தில் (www.tnstc.in) முன்பதிவும் செய்யலாம்.

