ADDED : டிச 03, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பிறந்த 13 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை மாவட்ட செயலாளர் மணிமாறன் அணிவித்தார்.
மேலும் கர்ப்பிணிகளுக்கு பரிசு பெட்டகம் வழங்கினார். துாய்மை பணியாளர்கள், அரசு மருத்துவமனை பணியாளர்களுக்கு போர்வை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.
நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யா, துணைத் தலைவர் ஆதவன், இளைஞர் அணி அமைப்பாளர் விமல் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.