ADDED : செப் 19, 2026 05:53 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் அரசு மருத்துவமனையின் 2வது தளத்தின் ஜன்னலில் மலை தேனீக்கள் கூடு கட்டி உள்ளது.
நேற்று தேனீக்கள் பறந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த மேலுார் பகுதிகளை சேர்ந்த நாச்சம்மாள் 33, கண்ணகி 30, சிவனம்மாள் 30, நாகம்மாள் 75 பாண்டிச்செல்வி 39, உட்பட 13 க்கும் மேற்பட்டோரை கொட்டியதில் அனைவரும் மருத்துவமனையை விட்டு வெளியே ஓடினர். காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
