/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் 135 நெல் கொள்முதல் மையம்
/
மதுரையில் 135 நெல் கொள்முதல் மையம்
ADDED : பிப் 07, 2026 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் விளையும் நெல்லை விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 135 நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக 80 நிலையங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவ சாயிகள் சம்பா பருவத்தில் விளைந்த நெல்லை நேரடியாக விற்பனை செய்து, அரசு நிர்ணயித்துள்ள தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

