ADDED : அக் 17, 2024 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே வாவிடமருதுாரில் முத்தாலம்மன் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் கிராம மக்கள் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
தி.மு.க.,ஒன்றிய செயலாளர் தன்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் முத்தையன், இளைஞரணி நிர்வாகிகள் சந்தனகருப்பு, தவசதீஷ், ஊராட்சி தலைவர் திருநாவுக்கரசு துவக்கி வைத்தனர். வடத்தில் பூட்டிய ஒரு காளைக்கு 20 நிமிடம், அதனை அடக்க 9 வீரர்கள் களம் இறங்கினர்.
காளை பிடிபட்டால் காளையர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெங்கடேசன் எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார்.
பங்கேற்ற 18 காளைகளுக்கும் மரியாதை செய்யப்பட்டது. போட்டியின் போது 15 வீரர்கள் காயமடைந்தனர். அலங்காநல்லுார் போலீசார் பாதுகாப்பு வழங்கினர்.