ADDED : பிப் 06, 2026 06:19 AM
மதுரை: சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.6780 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் அவர்கள் தினமும் மாவட்ட தலைநகரங்களில் மறியலில் ஈடுபடுகின்றனர்.
ஆக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் மதுரை அண்ணா பஸ்ஸ்டாண்ட் அருகே நேற்று 3வது நாளாக மறியல் நடந்தது. சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மேனகா, தமிழ்ச்செல்வி கூட்டுத் தலைமையில் போராட்டம் நடந்தது. சத்துணவு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் நுார்ஜஹான் துவக்கி வைத்தார். அரசு ஊழியர் சங்க முன்னாள் துணைத் தலைவர் சோலையன், மாநில நிதிக்காப்பாளர் மணிகண்ணன், ஐ.சி.டி.எஸ்., ஊழியர், உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் அங்காளீஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
