ADDED : மார் 20, 2024 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாவட்டம் குடிமைப்பொருள் பறக்கும் படை தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் உணவுகடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்.ஐ., முத்துராஜா மற்றும் போலீசார், திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் ஸ்டாப் அருகில் மினி சரக்கு வேனை சோதனையிட்டனர்.
அதில் 1530 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக அரிசி, வேன் உரிமையாளர் சோலையழகுபுரம் கார்த்திக் 32, டிரைவர் ஜெய்ஹிந்த்புரம் சந்தானம் ஆகியோரை கைது செய்தனர்.

