sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒரே நாளில் 154 டன் விளைபொருட்கள் விற்பனை திருமங்கலம் ஒழுங்குமுறை கூடத்தில்

/

ஒரே நாளில் 154 டன் விளைபொருட்கள் விற்பனை திருமங்கலம் ஒழுங்குமுறை கூடத்தில்

ஒரே நாளில் 154 டன் விளைபொருட்கள் விற்பனை திருமங்கலம் ஒழுங்குமுறை கூடத்தில்

ஒரே நாளில் 154 டன் விளைபொருட்கள் விற்பனை திருமங்கலம் ஒழுங்குமுறை கூடத்தில்


ADDED : பிப் 10, 2024 05:18 AM

Google News

ADDED : பிப் 10, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று ஒரே நாளில் 154 டன் விளைபொருட்கள் ரூ. 42 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

விருதுநகர், கள்ளிக்குடி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், பாப்புநாயக்கன்பட்டி, எரிச்சநத்தம், உசிலம்பட்டி ஆகியோரின் 1 லட்சத்து 4066 ஆயிரம் கிலோ மக்காச்சோளம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ. 24 க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ 21.80க்கும் விலை போனது. இதன் மூலம் ரூ. 24 லட்சத்து 11 ஆயிரத்து 690க்கு வர்த்தகம் நடந்தது.

அரியலுார் மாவட்டம் குடிக்காடு கிராம விவசாயியின் 3 ஆயிரத்து 510 கிலோ நாட்டுக்கம்பு விற்பனை மூலம் ரூ. 2 லட்சத்து 33 ஆயிரத்து 415 க்கும், தங்கலாச்சேரி, கொடிக்குளம்,விடத்தகுளம் கிராம விவசாயிகளின் 311.800 கிலோ கொப்பரை விற்பனை மூலம் ரூ. 23 ஆயிரத்து 928க்கும் வர்த்தகம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை விவசாயியின் 880 கிலோ கருப்புகவுனி விற்பனை மூலம் ரூ. 54 ஆயிரத்து 560க்கும், சேடப்பட்டி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், நல்லியதேவன்பட்டி, திருமங்கலம் பகுதி விவசாயிகளின் 19 ஆயிரத்து 950 கிலோ குதிரைவாலி மூலம் ரூ. 8 லட்சத்து 63 ஆயிரத்து 138க்கும் வர்த்தகம் நடந்தது.

சிவகங்கை, திருமங்கலம் விவசாயிகளின் 17 ஆயிரத்து 315 கிலோ நெல் மூலம் ரூ. 4 லட்சத்து 29 ஆயிரத்து 862 க்கும், கிருஷ்ணாபுரம், திருமங்கலம் விவசாயிகளின் 7977 கிலோ அக் ஷயா நெல் விற்பனை மூலம் ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 466க்கும் வர்த்தகம் நடந்தது. இவ்வகையில் நேற்று ஒரே நாளில் ரூ. 42 லட்சத்து 52 ஆயிரத்து 59க்கு வர்த்தகம் நடந்துள்ளது.

இதுதொடர்பான விபரங்களுக்கு கண்காணிப்பாளர் வெங்கடேஷை 90251 52075, மேற்பார்வையாளரை 96008 02823, சந்தை பகுப்பாளரை 87543 79755ல் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us