/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
16 ஆயிரம் நெல்மூடைகள் கீழவளவில் தேக்கம்
/
16 ஆயிரம் நெல்மூடைகள் கீழவளவில் தேக்கம்
ADDED : பிப் 27, 2026 06:14 AM

மேலுார்: கீழவளவு நெல் கொள்முதல் நிலையத்தில் எடையிட்ட 6 ஆயிரம் நெல்மூடைகளை கோடவுனிற்கு எடுத்துச் செல்லாமலும், எடையிடுவதற்காக 10 ஆயிரம் நெல்மூடைகளையும், திறந்தவெளியில் வைத்திருப்பதால் பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் கீழவளவில் நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. இங்கு கொங்கம்பட்டி, வடக்குவலைய பட்டி, தனியாமங்கலம் உள்பட பல கிராமங்களில் இருந்து கொண்டுவந்த நெல் மூடைகள் 12 நாட்களாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை இதுவரை எடையிடாததால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்யவில்லை. அவை வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து வீணாகிறது. இங்கு எடையிட்ட 6 ஆயிரம் நெல் மூடைகள், எடையிட வேண்டிய 10 ஆயிரத்துக்கும் கூடுதலான மூடைகள் தேங்கி கிடக்கின்றன. அதனால் விவசாயிகள் பாதிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் நெல் கொள்முதலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

