தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 19 மதுக்கடைகள் மூடல் பான்மசாலா பறிமுதல்

 19 மதுக்கடைகள் மூடல் பான்மசாலா பறிமுதல்

 19 மதுக்கடைகள் மூடல் பான்மசாலா பறிமுதல்


ADDED : மே 16, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தமிழக அரசு உத்தரவுபடி மதுரையில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் அருகேயுள்ள 50 மதுக்கடைகள் மூட பரிந்துரைக்கப்பட்டது. நேற்று உசிலம்பட்டி, டி.கல்லுப்பட்டி, கோச்சடை உட்பட 19 இடங்களில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன.

முனிச்சாலை, லட்சுமிபுரம், தெற்குவாசல் பகுதி பிஸ்மி ஸ்டோர், பிரியா காப்பர், மாலிக் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட 23.438 கிலோ பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1.06 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

கள்ளிக்குடி, மேலுார், ஒத்தக்கடை பகுதியில் சட்ட விரோதமாக டிராக்டர், டிப்பர் லாரிகளில் கிராவல் மண் உள்ளிட்ட கனிமங்களை கடத்தியதாக 3 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us