தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 198 பேராசிரியர்களுக்கு பணி மாறுதல்

198 பேராசிரியர்களுக்கு பணி மாறுதல்

198 பேராசிரியர்களுக்கு பணி மாறுதல்


ADDED : நவ 27, 2024 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2024 04:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை : மதுரையில் நடந்த அரசு கலை அறிவியல், பொறியியல், கல்வியியல் கல்லுாரி பேராசிரியர்களுக்கான ஆன்லைன் பொதுமாறுதல் கலந்தாய்வில் 198 பேராசிரியர்களுக்கு பணிமாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன.

மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன் தலைமை வகித்தார். செயலர் கோபால், கல்லுாரிக் கல்வி இயக்குநர் சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்லுாரி கமிஷனர் ஆபிரகாம் முன்னிலை வகித்தனர். ஆன்லைன் கலந்தாய்வை துவக்கி வைத்த அமைச்சர் 28 பேருக்கு மாறுதல் உத்தரவுகளை வழங்கினார்.

அமைச்சர் கூறுகையில், மாநில அளவில் 2024--25 க்கான ஆன்லைன் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு அரசு கலை, கல்வியியல் கல்லுாரிகளில் 377 உதவி, இணை பேராசிரியர்கள் விண்ணப்பித்தனர். இவர்களில் 198 பேருக்கும், பொறியியல், பல்வகை தொழில்நுட்பக் கல்லுாரிகளில் இருந்து விண்ணப்பித்த 344 பேரில் 93 பேராசிரியர், விரிவுரையாளர்களுக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர்களுக்கு அவர்களின் விருப்ப அடிப்படையில் உத்தரவுகளை அரசு வழங்கியுள்ளது என்றார்.

கல்லுாரி போதைப்பொருள் எதிர்ப்புக் குழுவினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். முதல்வர் வானதி, பேராசிரியைகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us