/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
225 ஏக்கர்... 21 கட்டடங்கள்... 2600 ஊழியர்கள்...: மருத்துவ வசதி மட்டுமல்ல; கிராமங்களுக்கும் மறுமலர்ச்சி
/
225 ஏக்கர்... 21 கட்டடங்கள்... 2600 ஊழியர்கள்...: மருத்துவ வசதி மட்டுமல்ல; கிராமங்களுக்கும் மறுமலர்ச்சி
225 ஏக்கர்... 21 கட்டடங்கள்... 2600 ஊழியர்கள்...: மருத்துவ வசதி மட்டுமல்ல; கிராமங்களுக்கும் மறுமலர்ச்சி
225 ஏக்கர்... 21 கட்டடங்கள்... 2600 ஊழியர்கள்...: மருத்துவ வசதி மட்டுமல்ல; கிராமங்களுக்கும் மறுமலர்ச்சி
UPDATED : பிப் 07, 2026 07:29 AM
ADDED : பிப் 07, 2026 05:48 AM

எய்ம்ஸ் மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதிக்குள் வருகிறது. அதன் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா நேற்று நேரில் ஆய்வு செய்தார். அவரை நிர்வாக இயக்குனர் டாக்டர் அனுமந்தராவ் வரவேற்றார். முடியும் தருவாயில் உள்ள கல்வி வளாகம், நிர்வாக கட் டடம், வெளிநோயாளிகள் பிரிவு பணிகளை கேட் டறிந்தார்.
இதுகுறித்து ராஜன் செல்லப்பா கூறியதாவது:
எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையின் மறுமலர்ச்சியாக இருக்கும். பிரதமரும், முன்னாள் முதல்வர் பழனிசாமியும் சேர்ந்து தொடங்கி வைத்த இத்திட்டம் இது. 21 கட்டடங்கள் கட்டுமான பணி நடக்கிறது. இதில் 11 மாடி கொண்ட மருத்துவமனை கட்டட பணி தீவிரமாக நடந்து வருகிறது. சில கட்டடங்கள் முடியும் தருவாயில் உள்ளது.
தொழிற்சாலைகளுக்கு இருக்கும் சி.எஸ்.ஆர்., நிதி போல் இம்மருத்துவமனையை சுற்றியுள்ள 20 கிராமங்கள் கல்வி நிலையங்கள், ஊராட்சிகளுக்கு உதவி செய்ய எய்ம்ஸ் நிர்வாகம் நிதி ஒதுக்கியுள்ளது.
குறிப்பாக தோப்பூர் ஊராட்சிக்கு ரூ.2 கோடி, வேடர் புளியங்குளம் ஊராட்சிக்கும் ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு சேர்மனாக இருக்கும் கலெக்டர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அவர் ஒப்புதல் அளித்தால் உடனடியாக நிதி அளிக்க தயாராக உள்ளோம் என்று எய்ம்ஸ் நிர்வாகம் கூறுகிறது. இந்த நிதியால் சுற்றுவட்டார பகுதிகள் வளர்ச்சி அடையும்.
ஒரு செங்கலை காண்பித்து தி.மு.க.,வினர் அரசியல் செய்தார்கள். இன்று லட்சக்கணக்கான செங்கலால் கட்டடம் வான் உயர்ந்து நிற்கிறது. கட்டடப் பணியில் தினமும் 2600 ஊழியர்கள் தங்கி பணிபுரிகிறார்கள். மார்ச் இறுதிக்குள் மாணவர் களுக்கான விடுதி முடிக்கப்படும்.
இம்மருத்துவமனைக்கு அ.தி.மு.க., ஆட்சியில் 225 ஏக்கர் நிலத்தை முதல்வராக இருந்த பழனி சாமி வழங்கினார். தேவைப்பட்டால் விரிவாக்கம் செய்யப்படும்.
இவ்வாறு கூறினார்.
மாவட்ட துணைச் செயலாளர் சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கோட்டைக்காளை, பார்த்திபன், சேனாபதி, தோப்பூர் முன்னாள் ஊராட்சி தலைவர் சேகர், பொதுக்குழு உறுப்பினர் முருகேசன், கூத்தியார்குண்டு முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துராமன், பகுதி செயலாளர் செல்வகுமார் பங்கேற்றனர்.

