தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 23ம் புலிகேசி தி.மு.க., அமைச்சர்கள்; உதயகுமார் கிண்டல்

 23ம் புலிகேசி தி.மு.க., அமைச்சர்கள்; உதயகுமார் கிண்டல்

 23ம் புலிகேசி தி.மு.க., அமைச்சர்கள்; உதயகுமார் கிண்டல்


ADDED : ஜன 20, 2026 07:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 07:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ''அ.தி.மு.க., ஆட்சியில் செய்த சாதனைகளின் வரலாற்றை மறந்துவிட்டு 23ம் புலிகேசியாக உள்ள தி.மு.க., அமைச்சர்கள் வாய்க்கு வந்ததை வசைபாடக்கூடாது'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கூறினார்.

மதுரையில் அவர் கூறியதாவது:

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையை மக்கள் வரவேற்றுள்ளனர். இதை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க., அமைச்சர்கள் வரிசையாக வசைப்பாடி வருகிறார்கள். அவர்கள் பதட்டத்தோடு விமர்சிக்க என்ன காரணம், பழனிசாமி தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த உடனே 100 சதவீதம் மக்களிடத்தில் சென்று சேர்ந்துள்ளது. இதுவே முதல் கட்டமாக வெற்றியை உறுதி செய்திருக்கிறது. இதனால் நடுக்கத்துடன் இருக்கிற அமைச்சர்கள் வசைப்பாடி தங்களது அதிருப்தியை வெளிக்காட்டி வருகிறார்கள்.

2021 சட்டசபை தேர்தல் அறிக்கையில் குலவிளக்கு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.1500ஐ பழனிசாமி அறிவித்தார். 2000 அம்மா மினி கிளினிக், குடிமராமத்து திட்டம், ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லுாரிகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு என சாதனைகளை பட்டியலிடலாம். இந்த வரலாற்றை மறந்துவிட்டு 23ம் புலிகேசியாக உள்ள தி.மு.க., அமைச்சர்கள் வாய்க்கு வந்ததை வசைபாடக்கூடாது.

அ.தி.மு.க., ஆட்சியில் பொங்கல் பரிசாக ரூ.2500ஐ பழனிசாமி வழங்கினார். அதை காப்பி அடித்து தானே நீங்கள் ரூ.3000 வழங்கினீர்கள். பழனிசாமி யாரையும் காப்பி அடித்து அரசியல் செய்ய வேண்டிய நிலை இல்லை. அவரைதான் மற்றவர்கள் வழிகாட்டியாக எடுத்துக் கொண்டார்கள்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us