ADDED : செப் 11, 2026 06:51 PM
மதுரை: மதுரை அரசு சட்டக்கல்லுாரியின் பட்டமளிப்பு விழா செப்.,26 காலை 9:30 மணிக்கு தமுக்கம் மைதான கலையரங்கில் நடைபெறும். பட்டம் பெற ஏற்கனவே விண்ணப்பித்த 1997-–98 முதல் 2019-–20 வரை ஒவ்வொரு கல்வியாண்டிலும் 5 ஆண்டு பி.ஏ.,-எல்.எல்.பி., நிறைவு செய்த மாணவர்கள், 1998–-99 முதல் 2022–-23 வரை எல்.எல்.பி., நிறைவு செய்தவர்கள், 1999–-2000 முதல் 2022–-23 வரை ஒவ்வொரு கல்வியாண்டிலும் எல்.எல்.எம்.,நிறைவு செய்தவர்கள், இதுவரை பட்டம் பெறாதவர்கள் அரசு சட்டக்கல்லுாரிக்கு செப்.,15 காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை நேரில் அல்லது 0452 -253 3996 ல் விபரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். பெயர், பதிவு எண், பிறந்த தேதி, அலைபேசி எண் (வாட்ஸ் ஆப்), பயின்ற ஆண்டு, பட்டமளிப்பு விழாவில் பங்குபெற விருப்பம் ‛ஆம்’ அல்லது ‛இல்லை’ விபரங்களை glcmdugd2026@gmail.com மூலம் உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் குமரன் தெரிவித்தார்.
