/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'டிட்டோ ஜாக்' 2ம் நாள் மறியல் போராட்டம் 270 ஆசிரியர்கள் கைது
/
'டிட்டோ ஜாக்' 2ம் நாள் மறியல் போராட்டம் 270 ஆசிரியர்கள் கைது
'டிட்டோ ஜாக்' 2ம் நாள் மறியல் போராட்டம் 270 ஆசிரியர்கள் கைது
'டிட்டோ ஜாக்' 2ம் நாள் மறியல் போராட்டம் 270 ஆசிரியர்கள் கைது
ADDED : ஜூலை 19, 2025 03:05 AM
மதுரை: மதுரையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் (டிட்டோ ஜாக்) இரண்டாம் நாள் மறியல் போராட்டத்தில் 152 ஆசிரியைகள் உட்பட 270 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்றக்கோரி ஆக.,8ல் சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதையொட்டி தொடர் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. முதல் நாளில் மறியலில் 257 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று இரண்டாம் நாள் மறியல் போராட்டம் பெரியார் பஸ் ஸ்டாண்ட் கட்டபொம்மன் சிலை அருகே நடந்தது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மணிமேகலை, மாநில நிர்வாகி செல்லப்பாண்டியன் துவக்கி வைத்தனர். பல்வேறு சங்கங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் கணேசன், பீட்டர் ஆரோக்கியராஜ், ராஜூ, சீனிவாசன், பிச்சை, தங்கவேல், மகாலிங்கம் முன்னிலை வகித்தனர். மறியலில் ஈடுபட்ட 270 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் செல்வக்குமரேசன், பொருளாளர் தென்னவன் பங்கேற்றனர்.