தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 3 முறை இயக்கிய 'லோகோ பைலட்'

 3 முறை இயக்கிய 'லோகோ பைலட்'

 3 முறை இயக்கிய 'லோகோ பைலட்'


ADDED : மார் 12, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 05:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த ரயில்களை மூன்று முறை இயக்க வாய்ப்பு பெற்ற மதுரை லோகோ பைலட் தாமரைச் செல்வனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

தென்மத்திய ரயில்வேயின் ஹூப்ளி கோட்டத்தில் 1994ல் உதவி லோகோ பைலட்டாக பணியில் சேர்ந்தவர் தாமரைச் செல்வன். இன்றுடன் (மார்ச் 12) 60 வயதை பூர்த்தி செய்யும் இவர், நேற்று பிரதமர் மோடி திருச்சியில் தொடங்கி வைத்த ராமேஸ்வரம் - மங்களூரு ரயிலை இயக்கினார்.

ஏற்கனவே பிரதமர் மோடி 2019ல் தொடங்கி வைத்த மதுரை - சென்னை 'தேஜஸ்', 2025ல் புதிதாக கட்டப்பட்ட பாம்பன் பாலம் வழியாக இயக்கப்பட்ட முதல் ரயிலையும் இவரே இயக்கினார்.

இந்திய ரயில்வேயில் 3 முறை வாய்ப்பு கிடைத்த பெருமை கிட்டியதால் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தனது 32 ஆண்டுகால பணி அனுபவத்தில், 'டெபுடேஷன்'ல் வேறு பணிகளுக்கு செல்லாமல், ஓட்டுநர் பணியை மட்டுமே மேற்கொண்ட இவர், இம்மாதத்துடன் (மார்ச் 31) ஓய்வு பெறுகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us