/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் கண்மாய் கரையில் 300 மரக்கன்றுகள்
/
திருப்பரங்குன்றம் கண்மாய் கரையில் 300 மரக்கன்றுகள்
திருப்பரங்குன்றம் கண்மாய் கரையில் 300 மரக்கன்றுகள்
திருப்பரங்குன்றம் கண்மாய் கரையில் 300 மரக்கன்றுகள்
ADDED : மார் 29, 2025 05:30 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயின் கரையில் 1.20 கி.மீ. நீளத்தில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம், திருநகரிலிருந்து பெரியார், எம்ஜிஆர், ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டுகளுக்கு செல்லும் டவுன் பஸ்கள், தனியார் வாகனங்கள் புதிய தார் ரோட்டில் சென்று மூலக்கரை பகுதியில் வலது புறமாக திரும்பி மன்னர் கல்லுாரி மூலக்கரை வழியாக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
பசுமலை, பழங்காநத்தம் பகுதியில் இருந்து திருநகர், திருமங்கலத்திற்கு செல்லும் வாகனங்கள் வழக்கமான பாதையில் செல்லவும், விளாச்சேரிக்கு செல்ல அந்த ரோட்டில் சென்று வலதுபுறமாக திரும்பி புதிய ரோடு வழியாக செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ரோடு பயன்பாட்டிற்கு வரவில்லை.
கண்மாய் கரையில் இருந்த 400க்கு மேற்பட்ட மரங்கள் புதிய தார்ச்சாலைக்காக அகற்றப்பட்டன.
அதற்கு பதிலாக கரைப் பகுதிகளிலும் காலி இடங்களிலும் 300க்கும் மேற்பட்ட மரங்கள் நெடுஞ்சாலைத் துறையினரால் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.