/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு 300 சிறப்பு பேருந்துகள்: மதுரை போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு

ADDED : டிச 05, 2024 04:16 PM

மதுரை: திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக திருவண்ணாமலைக்கு அதிகமான மக்கள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பயணிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் மதுரை மாவட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்கள் மூலம் வழக்கமான வழித்தட பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் என 300 பேருந்துகள் டிசம்பர் 12 முதல் 15 வரை இயக்கப்பட உள்ளன.
இந்த தீப திருவிழாவுக்காக திருவண்ணாமலை சென்று வர பயணிகளின் வசதிக்காக https://www.tnstc.in என்ற இணையதளத்திலும், டி.என்.எஸ்.டி.சி மொபைல் ஆப் மூலமாகவும் 3X2 டீலக்ஸ் பேருந்துகளின் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.