/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை கைதிகளுக்கு 358 கிலோ கோழி கறி
/
மதுரை கைதிகளுக்கு 358 கிலோ கோழி கறி
ADDED : ஜன 30, 2025 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மத்தியசிறை கைதிகளுக்கு சக கைதிகளே கோழி வளர்த்து நேற்று 358 கிலோ சிக்கன் கறி வழங்கினர்.
சிறை டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் உத்தரவுபடி கைதிகளுக்கு கைதிகளால் கோழிப்பண்ணை நடத்தப்படுகிறது. மதுரை சிறையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு புதன், ஞாயிறு அன்று சிக்கன் கறி வழங்கப்படுகிறது. இதற்காக 6 குடில்கள் அமைக்கப்பட்டு 1760 கோழிக்குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. நேற்று முதல் இப்பண்ணையில் இருந்து கறி வழங்கும் பணி துவங்கியது. பெண் கைதிகளுக்கு 18 கிலோவும், ஆண் கைதிகளுக்கு 340 கிலோவும் சிக்கன் கறி வழங்கப்பட்டது.

