/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆரோக்கியத்தின் 3வது அச்சுறுத்தல் தொற்றுநோய் மீனாட்சி மிஷன் மருத்துவமனை கருத்தரங்கில் தகவல்
/
ஆரோக்கியத்தின் 3வது அச்சுறுத்தல் தொற்றுநோய் மீனாட்சி மிஷன் மருத்துவமனை கருத்தரங்கில் தகவல்
ஆரோக்கியத்தின் 3வது அச்சுறுத்தல் தொற்றுநோய் மீனாட்சி மிஷன் மருத்துவமனை கருத்தரங்கில் தகவல்
ஆரோக்கியத்தின் 3வது அச்சுறுத்தல் தொற்றுநோய் மீனாட்சி மிஷன் மருத்துவமனை கருத்தரங்கில் தகவல்
ADDED : ஜன 09, 2024 06:13 AM

மதுரை : ''இந்தியர்களின் ஆரோக்கியத்தில் 3வது அச்சுறுத்தலாக இருப்பது தொற்றுநோய்கள்'' என மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த 'மிட்கான் 2024' தொற்றுநோய்கள் குறித்த கருத்தரங்கில் மருத்துவமனை தலைவர் டாக்டர் குருசங்கர் பேசினார்.
அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். பாலிகிளினிக், நர்சிங் ஹோம்களில் நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன் கட்டுப்பாடு குறித்து சென்னை அப்போலோ மருத்துவமனை தொற்றுநோய் துறை முதுநிலை சிறப்பு நிபுணர் ராமசுப்ரமணியன், சரியான 'ஆன்ட்டிபயாட்டிக்' மருந்துகளை தேர்வு செய்வது குறித்து வேலுார் கிறிஸ்தவ மருத்துவ கல்லுாரி தொற்றுநோய் துறைத்தலைவர் பிரிசில்லா ருபாலி பேசினர்.
டாக்டர் குருசங்கர் பேசியதாவது: டெங்கு, மலேரியா, டைபாய்டு, ஸ்க்ரப் டைபஸ் போன்ற நோய்கள் இந்தியாவில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதயநாள நோய்கள், நாள்பட்ட தீவிர சுவாசப்பாதை நோய்களுக்கு அடுத்து உயிரிழக்கும் 5 நபர்களில் ஒருவர் தொற்றுநோயால் பாதிக்கப்படும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தையாக இருக்கின்றனர்.
இத்தொற்றுக்கு வழங்கப்படும் முக்கிய மருந்துகள் குழந்தைகளுக்கு திறன்மிக்கதாக செயல்படுவதை வலுவான நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளின் மூலம் உறுதிசெய்ய முடியும் என்றார்.
மருத்துவ நிர்வாகி டாக்டர் கண்ணன், மருத்துவ இயக்குநர் ரமேஷ் அர்த்தநாரி, சிறுநீரகவியல் துறைத்தலைவர் சம்பத்குமார், இதய மயக்கவியல் துறைத்தலைவர் குமார், தொற்றுநோய்கள் சிகிச்சை துறை இணை மருத்துவ நிபுணர் மாலதி, பொது மருத்துவ துறை நிபுணர் பிரணிதா கருத்தரங்க அமர்வை நடத்தினர்.