/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உசிலம்பட்டி அருகே கார் மோதி 4 பேர் பலி * 3 பேர் படுகாயம்
/
உசிலம்பட்டி அருகே கார் மோதி 4 பேர் பலி * 3 பேர் படுகாயம்
உசிலம்பட்டி அருகே கார் மோதி 4 பேர் பலி * 3 பேர் படுகாயம்
உசிலம்பட்டி அருகே கார் மோதி 4 பேர் பலி * 3 பேர் படுகாயம்
ADDED : மே 25, 2025 02:31 AM

உசிலம்பட்டி:மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ரோட்டை கடக்க முயன்ற 7 பேர் மீது கார் மோதியதில் -4 பேர் இறந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
உசிலம்பட்டி அருகே பேச்சியம்மன் கோயில் பட்டி பாண்டிச்செல்வி, குஞ்சாம்பட்டி ஜோதிகா ஆகியோரது குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் உசிலம்பட்டி பெருமாள்கோயிலுக்குச் சென்றுவிட்டு நேற்று இரவு 8:25 மணிக்கு குஞ்சாம்பட்டி விலக்கு அருகில் பஸ்சிலிருந்து இறங்கினர். ரோட்டை கடக்க முயன்ற போது பூச்சிபட்டியைச் சேர்ந்த ஆனந்தகுமார் ஓட்டி வந்த கார் 7 பேர் மீது மோதியது.
இதில் குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த பிரகலாதன் 1, தாய் ஜோதிகா 25, இவரின் மாமியார் லட்சுமி 55, பாண்டிச்செல்வி 42, பலியாகினர். கவியாழினி 1, ஜெயபாண்டி 44, கருப்பாயி 55, படுகாயங்களுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்