/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பால தடுப்பில் கார் மோதி 4 பேர் பலி; 7 பேர் படுகாயம்
/
பால தடுப்பில் கார் மோதி 4 பேர் பலி; 7 பேர் படுகாயம்
பால தடுப்பில் கார் மோதி 4 பேர் பலி; 7 பேர் படுகாயம்
பால தடுப்பில் கார் மோதி 4 பேர் பலி; 7 பேர் படுகாயம்
ADDED : ஜன 21, 2024 03:48 AM
தஞ்சாவூர்: துாத்துக்குடி அருகே மூன்றாம் மைல் இந்திரா நகரை சேர்ந்தவர் மரிய செல்வராஜ் 37. இவரது மனைவி பாத்திமா மேரி 31. இவர்கள் மகன் சந்தோஷ் செல்வம் 7.
வேளாங்கண்ணியில் வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் காரில் புறப்பட்டனர்.
அவர்களுடன் பாக்கியராஜ் 62, அதே பகுதியை சேர்ந்த சண்முகத்தாய் 53, சரஸ்வதி 50, கணபதி 52, லதா 40, ராணி 40, ஞானம்மாள் 60 ஆகியோரும் வந்தனர். சின்னபாண்டி 40 காரை ஓட்டினார்.
நேற்று அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம் மனோரா பகுதியில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பால தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
பாக்கியராஜ் ராணி ஞானம்மாள் சின்னபாண்டி சம்பவ இடத்திலேயே இறந்தனர். பலத்த காயமடைந்த ஏழு பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சேதுபாவாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் படுகாயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் லேசான காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.

